செட்டிலாகியாச்சு அப்புறம் என்ன?

“அப்பாடா ! படிப்ப முடிச்சிட்டு, ஒரு வழியா நல்ல வேலையில செட்டில் ஆகியாச்சு.”

“இனிமே என்ன?…. கல்யாணம் குழந்தைதான்.”
“ம்ம்ம்… என்ன குழந்தை முதல்ல பெத்துக்கலாம் … ஆணா பெண்ணா !?!”
“அட! அந்த கம்பெனியில அதிக சம்பளம் கொடுக்குறானா ..! அப்போ இந்த கம்பெனியில பேப்பர் போட்டுற வேண்டியது தான் ;-)”
“பேஸ்புக்க ஹோம் பேஜா வைக்கலாமா … இல்ல கூகில் பிளஸ்ஸ வைக்கலாமா?!…”
“இப்டி யோசிக்கறது ஒரு தப்பா ?”
“தப்பில்லைதானே நான் தான் படிச்சு மேல வந்துட்டேனே, இப்டி எல்லாரும் வந்துட்டா இந்தியா வல்லரசு ஆகிடும் தானே!”
“இந்தியாதான் வேகமா முன்னேறிகிட்டு இருக்கே, அதுவும் தமிழ்நாடு கல்வியில ‘கட கட’ன்னுள்ள முன்னேறிகிட்டு இருக்கு, அப்புறம் எதைப் பற்றி நான் கவலைப்படனும்?”
இப்டில்லாம் என்னை மாதிரியே கேள்வி கேக்குறவங்களுக்கு நான் பார்த்த ஒரு சம்பவத்த சொல்லலாம்னு நினைக்கறேன்.
சமீபத்துல, காளிங்காவரம்ன்னு ஒரு கேள்விப்படாத கிராமத்துக்கு “வழிகாட்டுதல்” [Career Guidance] நிகழ்ச்சிக்கு “நல்வழிகாட்டி” அமைப்பின் மூலமா போயிருந்தேன்.
சரி வழிகாட்டுதல் தானே, போயி நாலு நல்ல காலேஜையும், அதுக்கு எப்படி விண்ணப்பிக்கறது-ன்னும் சொல்லிட்டு வரலாம்ன்னு போனா …
அங்க,

“நீயெல்லாம் படிச்சு என்ன பண்ண போறே! மொதல்ல வீட்டு வேலைய செய், கூடிய சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்-ன்னு அம்மா சொல்றாங்க. ஆனா எனக்கு படிக்க ஆசை “-ன்னு சொல்லி ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு கிராமத்து பொண்ணு அழுகுது.
“படிக்காமலே பெரிய ஆள் ஆனவங்க பலர் இருக்காங்களே”ன்னு, இன்னொரு பையன் சொல்றான்.

இதையெல்லாம் பாக்குறப்போ, நான் முன்னாடி சொன்னது சரியில்லையோன்னு தோனுது. இந்த நாட்டோட கடைசி மனிதன் வரை சிறந்த கல்வி சென்றடைய வேண்டியதன் அவசியமும் புரிஞ்சுது.
உங்களுக்கும் அப்படி தோன்றினால், எங்களுடன் கைகோருங்கள் [http://www.nalvazhikatti.org/joinus.htm]
இதைப் பற்றி ஏதாவது பேசணும்னு ஆசைப் படுகிறீர்களா? வாருங்கள் இங்கே [http://discuss.nalvazhikatti.org/index.php]
நல்வழிகாட்டி பற்றி:

கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், கல்வி மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்ட விசயங்களை கற்பிக்கவும் ஆரம்பிக்கப்பட்டது தான் நல்வழிகாட்டி.
இந்த நாட்டின் கடைசி மனிதன் வரை, சிறந்த கல்வி சென்று சேர வேண்டுமென்று பாடுபடும் ஒரு அமைப்பு..

கொசுறு செய்தி :
கொடை வள்ளல் “கர்ணன்” [அதாங்க மகாபாரதத்துல வருவாரே], அவர் போரில் இறந்து சுவர்க்கம் செல்லும் வழியில் தொடர்ந்து போகமுடியாமல் பசியால் துடித்தாராம் [செத்த பிறகு எப்டி பசிக்கும்-ன்னு கேக்க கூடாது 😉 ]. ஏன் இப்டி நடக்குதுன்னு நாரதர்ட்ட கேட்டா… “நீ அன்ன தானம் பண்ணல அதான் இப்டி”-ன்னு சொன்னாராம் அவர். சரி இப்போ என்ன பண்றதுன்னு கேட்க, நாரதர் சொன்னாராம் “ஒருவன் உன்னிடம் பசி என்று வந்த போது, உன் ஆட்காட்டி விரலை நீட்டி அன்னச்சத்திரத்தை காட்டினாய், அந்த விரலை உன் வாயில் வை கொடுரப் பசி நீங்கும்”ன்னு.
ஒருவனுக்கு அன்னச்சத்திரம் காட்டிய அந்த விரலுக்கே அவ்வளவு சிறப்புன்னா…. ஒருவரோட வாழ்க்கைக்கே வழிகாட்டப் போற உங்க கை எவ்வளவு சிறந்ததாய் இருக்கும்…. எண்ணிப் பாருங்கள்.

 

Tagged with: , , , , , , , , , , , , , , , , , , , , , ,
இன்னொரு நான்! இல் பதிவிடப்பட்டது

புதிய பயணம்

நன்பரின் வெற்றி நோக்கிய முதல் படிக்கட்டு, வெற்றி தேடுவோருக்கு ஒரு நம்பிக்கை லைட்டு!

எறுழ்வலி

 நான் கல்லூரி படிப்பு முடித்து ஓர் ஆண்டு வேலை முடிக்கும் வரை நான் குறும்படம் எடுப்பேன் என்றோ, ஒரு நிறுவனம் தொடங்குவேன் என்றோ நினைத்ததேயில்லை. நானும் வழக்கம் போல பொறியியல் படிப்பை முடித்ததும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து திங்கள்தோறும் ஊதியம் பெற்று களிப்படைந்து கொண்டிருந்தேன். வேலை போக மீதமுள்ள நேரத்தில் பொழுதைப் போக்குவதற்காக மட்டுமே இங்கு பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தேன். அந்தப் பதிவுகளைப் படிக்கும் மிகச் சிலரில் ஒருவனான என் நண்பன் சரவணராம்குமார் என் கதைகளைக் குறும்படமாக எடுக்க முயற்சி செய்யலாம் என்று ஆலோசனை கூறினான் (அப்போது இணையத்தில் மிகச் சில குறும்படங்களே வெளியாகியிருந்தன!). ஆனால், குறும்படம் எடுப்பதற்கான வழிமுறைகள் எதுவும் எனக்கு தெரியாத கரணியத்தால் வேண்டாமென்று அப்போது விட்டுவிட்டேன்.

 

நிகழ்படத்தொகுப்பை அவனே பார்த்துகொள்வதாகவும், இசைக்கு அவன் நண்பன் உதவுவான் என்றும் மீண்டும் சரவணராம்குமார் கூறினான். என்னுடைய வேலை கதை எழுதுவது மட்டும் தான் என்பது போல் தோன்றியதும், என்னிடமிருந்த ஒரு நிகழ்ப்படக்கருவியைப் பயன்படுத்தி படமெடுத்துவிடலாம் என்று தோன்றியது! நண்பர்களை மட்டுமே வைத்து நகைச்சுவையாக குறும்படம் எடுக்க முயற்சி செய்து பெங்களூர் குறும்படத்தை ஒருவழியாக எடுத்துமுடித்தோம். வெறும் கதை மட்டுமே எழுதப்போவதாக ஆரம்பித்து நிகழ்ப்படத் தொகுப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, நடிப்பு என்று எல்லாவற்றையுமே ஓரளவு கற்றுவிட்டேன். ஒரு குறும்படத்தை முழுமையாக எடுப்பது கடினமாயிருந்தாலும், ‘பெங்களூர்’ குறும்படம் பெற்ற வெற்றி என்னை மீண்டும் குறும்படம் எடுக்கத் தூண்டியது!

 

அப்படி உருவானது தான் உடன்பிறப்புகளே குறும்படம்…

View original post 237 more words

இன்னொரு நான்! இல் பதிவிடப்பட்டது

தமிழக அரசின் ஐ.ஏ.எஸ் தேர்வு பயிற்சி மையம்

தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம். இந்த மையம் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலைய வளாகத்தில் இயங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வுக்கு 200 பேருக்கு முழு நேர பயிற்சியும், 100 பேருக்கு பகுதி நேர பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இந்த மையத்தில் சேர என்ன செய்ய வேண்டும்?

உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் (கலெக்டர் அலுவலகம்) செல்லுங்கள். அங்கு வரவேற்பறை (அ) நுழைவாயிலில் ஒரு அறிவிப்புப் பலகை இருக்கும். அப்பலகையில் அறை எண் மற்றும் அலுவலகத்தின் பெயர் கொண்ட பட்டியல் எழுதப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக,

அறை எண்      அலுவலகத்தின் பெயர்

022                         பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்

நீங்கள் நேராக அந்த அறைக்குச்சென்று, ஒரு மனு எழுதித் தரவேண்டும்.

அனுப்புநர்: உங்கள் பெயர் & முகவரி

பெருநர்:  பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்

பொருள்: தமிழக அரசின் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் சேர விரும்புகிறேன், அதற்கு விண்ணப்பப் படிவம் கொடுத்துதவ வேண்டி

அய்யா,

நான் தமிழக அரசின் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் சேர விரும்புகிறேன், அதற்கு விண்ணப்பப் படிவம் கொடுத்துதவ வேண்டுகிறேன்.

இங்ஙனம்,

தங்கள் உண்மையுள்ள,

உங்கள் பெயர்.

பிறகு அங்குள்ள அலுவலர் உங்களுக்கு அந்த விண்ணப்பப் படிவத்தினைத் தருவார். அதில் உங்கள் பெயர், முகவரி, புகைப்படம், சாதி, மதம், ஆண்டு வருமானம், கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் உங்கள் பட்டப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழின் நகலையும், சாதி சான்றின் நகலையும் இனைக்க வேண்டும்.  இந்த விண்ணப்பப் படிவத்துடன் ஒரு கடித உறை இருக்கும், அதில் 10 ரூபாய்க்கு அஞ்சல் தலை ஒட்ட வேண்டும். இவற்றையெல்லாம் முடித்தபின் அந்த அலுவலரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், இனைக்கப் பட்ட நகல்கள் மற்றும் கடித உறையையும் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வளவே, வீட்டிற்கு வந்து நன்றாக படிக்க ஆரம்பியுங்கள். பயிற்சி மையத்தில் சேருவதற்கான இந்த நுழைவுத்தேர்வுக்கும் கடும் போட்டி இருக்கும்.

அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் முன் எடுத்துச் செல்ல வேண்டியவை,

1. எழுதுகோல்

2. வெள்ளைத் தாள் – மனு எழுத

3. பட்டப் படிப்பை முடித்ததற்கான சானறிதழின் நகல்

4. சாதிச் சான்றிதழின் நகல்

5. குடும்ப அட்டையின் நகல் – நீங்கள் அந்த மாவட்டத்தினை சேர்ந்தவரா என சரிபார்க்க.

6. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

7. 10 ரூபாய்க்கு அஞ்சல் தலை

Tagged with: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
இன்னொரு நான்! இல் பதிவிடப்பட்டது

ரிலையன்ஸ் கொள்ளையன்

நன்பர்களே,

இரண்டு மாசத்துக்கு முன்னாடி ரிலையன்ஸ் முன்-கட்டண(ப்ரீ-பெய்டு) நென்கனக்ட் பிளஸ் வாங்கினேன். அது எனக்கு தற்போது தந்த அதிர்ச்சிகளை உங்களிடம் சொல்லப் போறேன். இதை படித்து விழித்துக்கொள்பவர்கள் விழித்துக்கொள்ளலாம்.

நெட்கனக்ட் பிளஸ்ல இனைய வேகம் நல்லாயிருக்குன்னுதாங்க வாங்குனேன். ஒரு மாசம் நல்லாத்தான் இருந்துச்சு. அடுத்த மாசம் எனக்கு இனையம் தேவைப்படாததுனால ரீ-சார்ஜ் பண்ணாம வச்சுருந்தேன். பிறகு இப்போ இனையத்தின் தேவை வந்ததுனால 1500 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் பண்ணேன். மடிகணிணியில ஆசையோட நெட்கனக்ட்-ஐ இணைச்சு பாத்தா – “உங்களது சேவை தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது”-ன்னு காட்டுச்சு. கடுப்பாயி, போனை போட்டு கேட்டா “நீங்க குடுத்த ஆவணத்துல இருக்குற மூஞ்சியும் விண்ணப்பத்துல ஒட்டியிருக்குற புகைப்படத்துல உள்ள மூஞ்சியும் ஒத்து போகலங்க, அதான் உங்க கணக்க நிறுத்திட்டோம்”-ன்னாங்க. ஒரு விசயம், நான் கொடுத்த அந்த ஆவணம் என்னோட தேர்தல் அட்டைங்க, அதுல யார் மூஞ்சிதான் சரியா இருந்துது?!. சரிடா இப்ப நான் என்னடா பண்ணனும்னு கேட்டா, சரியான ஆவணத்த ரிலையன்ஸ் கடைல விண்ணப்பத்தோட குடுக்கனும்-னாங்க. ஓடோடி போயி குடுத்தேன். சேவையை திரும்ப பெற மூனு நாள் ஆகும்ன்னு சொல்லிட்டாங்க. எரிச்சலாகி, திரும்பவும் அவிங்க கிட்ட போனை போட்டு கேட்டேன்.

“ஏன்டா? இதெல்லாம் நியாயமாடா? இனைய சேவையை புடுங்குறதுக்கு முன்னாடி ஒரு குருஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) கூட அனுப்பலயேடா…”ன்னேன்.

“ஒழுங்கான ஆவணம் குடுக்காதது உங்க தப்புங்க”ன்னான். (மைய தேர்தல் ஆணையமே இத கொஞ்சம் கவனி!)

“அத சொன்னாத்தானடா எனக்குத் தெரியும். இத நம்பி 1500 ரூபாய் ரீ-சார்ஜ் பண்ணிருக்கேன்டா. மூனுநாளா அத பயன்படுத்த முடியாம போச்சேடா. வேலிடிட்டி நாட்கள்ள மூனுநாள் போச்சு. எனக்கு என்னோட மூனு நாள் சேவை திரும்ப வேனும்”ன்னேன்.

“போனதப்பத்தி கவலைப்படாதீங்க, ரிலையன்ஸ் கொள்கைப்படி போனது போனதுதான், திருப்பித் தரமாட்டோம். “ன்னான்.

“இந்த மாதிரி கப்பித்தனமான கொள்கை வேற என்னடா வச்சுருக்கீங்க? சொல்றா”ன்னேன்.

“ம்ம்ம்… 28 நாளுக்கும் மேல நீங்க எங்க சேவைய பயன்படுத்தலைன்னா உங்க கணக்கையே மூடிடுவோம்… இது எப்டி இருக்கு?!!”ன்னான்.

“டேய் டேய் 2500 ரூபாய் கொடுத்து இத வாங்கும் போது – வாழ்நாள் முழுவதுமான சேவைன்னீங்களேடா?! வாழ்நாள் முழுவதுமான சேவைன்னா, நான் பயன்படுத்ரேனோ இல்லியோ 2024 வரை அது உசுரோட இருக்குனுமுல்லடா”ன்னேன்.

“செல்லாது செல்லாது”ன்னுட்டான்.

மக்களே, நீங்களே சொல்லுங்க, இதெல்லாம் நியாயமா? அடுக்குமா? இதெல்லாம் பகல் கொள்ளையில்லியா?. இன்னமும் புரியலைன்னா, தெளிவா சொல்றேன் கேட்டுக்குங்க,

1. எங்கிட்ட சொல்லாம எனக்கான சேவையை புடுங்கியிருக்கான்.

2. அப்டி புடுங்குனதுக்கு அப்புறம் கூட என்ன ரீ-சார்ஜ் செய்ய அனுமதிச்சுருக்கான். அப்டின்னா நிறுத்தி வைக்கப்பட்ட சேவைக்கு எங்கிட்ட பணம் வாங்கியிருக்கான். எளிமையா சொல்லனும்னா ரமணா படத்துல பிணத்துக்கு சிகிச்சை செஞ்சா மாதிரி. இல்லாத சேவைக்கு பணம் வாங்கியிருக்கான்.

3. ரிலையன்ஸ்காரன், உங்க கணக்கை முடிட்டா பணம் வாங்குனான். சேவைய நிருத்திட்டுதான பணம் வாங்குனான்-னு யாராச்சும் நியாயம் பேசுனீங்கன்னா, என் பதில் இதோ – உடல் இல்லாமலா சிகிச்சை செஞ்சோம், உடல் இருக்குல்ல அதுல உயிர்தான இல்ல-ங்றா மாதிரி இருக்கு இந்த நியாயம்.

4. நியாமா, 1500 ரூபாய்க்கு மறுநிரப்பல் (ரீசார்ஜ்) பண்ணினா 90 நாட்கள் சேவை தரனும். ரிலையன்ஸ்காரன் பண்ணின கூத்துல 4 நாள் சேவை எனக்கு நட்டம். அதை திருப்பித்தர மாட்ரான்.

5. 28 நாள் தொடர்ந்து பயன்படுத்தலைன்னா கணக்க மூடிருவானாம். ஆனா என் கணக்கைப் பாத்தா, “Dear Customer , Your CORE Bal is 0.02 MB, validity : 2024-07-23″ ன்னு போட்டுருக்கு. அப்ப ரிலையன்ஸ்காரன் எங்கிட்ட வாழ்நாள் சேவைன்னு பொய் சொல்லியிருக்கான்.

6. இந்த 28 நாள் கணக்குப்படி பார்த்தா, ரிலையன்ஸ்காரன் அவனோட சேவைய தொடர்ந்து பயன்படுத்தும்படி என்னை கட்டாயப்படுத்துறான். வாழ்நாள் சேவைன்னு இனைப்ப குடுத்துட்டு பயன்படுத்தலைன்னா கணக்க மூடிருவோம்ன்னு மிரட்டுரான்.

7. இந்தியா தொலைதொடர்புத் துறைல புரட்சி பண்ணிருச்சுன்னு பீத்திகிது நடுவணரசு. அந்த தொலைதொடர்பு/இனைய சேவை வாடிக்கையாளர்களுக்கு சட்டமும் அரசும் தர்ர பாதுகாப்பு இவ்ளோதான். அதாவுது நிறுவனம் தனது வாடிக்கையாளரை தனது சேவையை தொடரந்து பயன்படுத்தும்படி மறைமுகமாக மிரட்டும், அதைத் தடுக்க எந்த சட்டமும் கிடையாது. சாவுங்கடான்னு அரசும் விட்டுடும். அவ்ளோதான்.

Tagged with: , , , , , , , , , , , , , , ,
இன்னொரு நான்! இல் பதிவிடப்பட்டது
முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,171 other followers

%d bloggers like this: