கதைய கேளுங்க

தேர்தலில் படித்தவர்கள்தான் பெரும்பாலும் ஓட்டு போடுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதை இம்மி அளவாவது பொய்யாக்கலாமே என்ற ஆசையில், இந்தியாவின் நல்ல ஒரு குடிமகனாக, எனது ஓட்டை பதிவுசெய்ய எனது பிறப்பிடம் செல்ல தயாரானேன். 7 மணிக்குத்தானே இரயில் கிளம்பும் என்று, 5 :30 க்கு இரயில் நிலையத்திற்கு புறப்பட்டேன். நான் வருவதற்கு முன்னரே இரயில் பறந்துவிட்டிருந்தது [பெங்களூரின் சாலை நெறிசல் பற்றித்தான் நமக்கு தெரியுமே :’-(] .

“320 ரூபாய் (வடை) போச்சே” என்ற உணர்வுடன் SETC பேருந்து நிலையம் நோக்கி சென்றேன். அங்கு ஒரு 16 பேர் நீண்ட வரிசையில் இருந்தார்கள். 17 வதாக நான். 40 நிமிடம் கழிந்தது கவுண்டரில் இருந்து மூன்றாம் ஆளாக நின்றிருந்தேன். அந்தநேரம்
 “மயிலாடுதுறை, கும்பகோணம் இருந்தா வாங்க!” என ஒரு நடத்துனர் கூவிக்கொண்டே சென்றார்.
அப்பாடா என்றிருந்தது எனக்கு.
அவரிடம் சென்று “சீட் இருக்கா சார்?” என்று கேட்டேன்.
“ம்ம் 7 வது சீட்ல உட்காந்துகோங்க” என்றார்.
300 ரூபாய் கொடுத்து பயண சீட்டு கேட்டேன், 260 ரூபாய்க்கு கொடுத்துவிட்டு மீதி கொடுக்காமலே சென்றார்.
“சார் மீதி 40 தரனும்” என்றேன்.
“தம்பி மயிலாடுதுறைக்கு சீட்டு 300 ஆனால் 260 க்கு தான் டிக்கெட் தருவேன், 40  ரூபாய் சீட்டுக்கு” என்றார்.
உங்களைப்போலவே எனக்கும் ஒன்றும் புரியவில்லை. என் பக்கத்தில் இருந்தவர் நடத்துனரின் ‘கொள்ளை’ பற்றி விளக்கினார். இடையில் அவர் ஒரு சந்தேகம் கேட்டார்.
“நான் கும்பகோணம் போறேங்க, என்கிட்டே 350 வாங்கிட்டான். முறைப்படி பாத்தா உங்கள்ட்ட தான் காசு கூட வாங்கணும்” – என.
நொந்து போனேன். ஒரு சமயம் ‘தமிழன்’ படத்தில் வருவது போல புகார் எழுதி அனைவரிடமும் கையொப்பம் வாங்கலாமா என்றெல்லாம் யோசித்தேன். சூடு உச்சந்தலைக்கு ஏறியது. கைக்குட்டையை முகத்தில் போட்டு என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன் [வேற வழி? பசி வேற! ].

பேருந்து தஞ்சையை நெருங்கியது, தூங்கிக் கொண்டிருந்த என்னை ஒரு கை தட்டி எழுப்பியது.
“மயிலாடுதுறை எல்லாம் எக்ஸ்ட்ரா 40 க்கு டிக்கெட் வாங்கணும். எடுங்க” – நடத்துனர்.
முடியல!
“என்ன நெனச்சுட்டு இருக்கீங்க சீட்டு 300 ரூபாய் ன்னு 260 க்கு தான் டிக்கெட் கொடுத்தீங்க… இப்போ திரும்பவும் 40 டிக்கெட் கேக்றீங்க…”
“எத்தன முறை டிக்கெட் வாங்கறது” என்றேன் கோபமாக.
“அந்த 40 ரூபாய் சீட்டுக்குங்க, இந்த 40 வண்டி பெட்ரோலுக்குங்க ” என்றபடியே சீட்டை என் கையில் புதைத்தார்.
அதை கசக்கி பிடித்தவாறே பின்சீட்டில் சாய்ந்தேன். எனக்கு பக்கத்தில் இருந்தவர் கும்பகோணத்துக்கு கூடுதலாக 20 ரூபாய் சீட்டு வாங்கிக்கொண்டிருந்தார். [கடவுளே !] மனவழுத்தம், தூக்கம், எரிச்சல் என எல்லாம் வந்து தலையை சுற்றியது. கண்களை மூடினேன் எங்கெங்கோ யோசனைகள் சென்றன. அதற்குள் பேருந்து முழுமைக்கும் கூடுதல் பயண சீட்டு கொடுத்து முடித்திருந்தார் நடத்துனர்.
“எல்லாருக்கும் சீட்டு வந்துச்சா?” என ஒரு சத்தம். [ஏன் இப்டி ? ஏற்கனவே தலைவலி வேற!]
“அஞ்சு சீட்டு கொறையுது”
“டிக்கெட் வாங்கியாச்சா? “
“டிக்கெட் வாங்கியாச்சா? “
“டிக்கெட் வாங்கியாச்சா? “…. என எல்லாரிடமும் கேட்டுக்கொண்டே வந்தார்.
என்னிடமும் கேட்கப்பட்டது “ம்ம்” என தலையசைத்தேன், கண்களை மூடிக்கொண்டே. நான்கு மணி நேரம் வெற்றிடத்தில் இருந்தது போல ஒரு உணர்வு. மயிலாடுதுறை வந்துவிட்டது. இறங்கினேன். பணப்பையில் பணம் அப்படியே இருந்தது. ஒருவேளை கூடுதல் பயண சீட்டுக்கு நான் பணம் தரவில்லையோ! என யோசித்தேன். ஆமாம் தரவில்லை. [:-P].

நான் அவரை ஏமாற்றினேனா ? இல்லை அவர் எல்லாரையும் ஏமாற்றினாரா? புரியாது நடந்து சென்றேன், எனது ஊரை நோக்கி!

இப்படி,
இண்டு-இடுக்கில் எல்லாம் நீக்கமற நிறைந்து நிற்கும் ஊழலை
அறவே நீக்கும்
அரசியல் மாற்றம் வேண்டும் – என
அகத்தில் கொண்டு – எனது
வாக்கை பதிவு செய்ய புறப்பட்டேன்.

-கிராமத்தான்

Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

இன்னொரு நான்! இல் பதிவிடப்பட்டது
2 comments on “கதைய கேளுங்க
 1. சேக்காளி சொல்கிறார்:

  //தேர்தலில் படித்தவர்கள்தான் பெரும்பாலும் ஓட்டு போடுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது//
  “படிச்சவன்” னா யாரு கொஞ்சம் விளக்குங்களேன்

 2. கிராமத்தான் சொல்கிறார்:

  வகுப்பில் முதல் பெஞ்சுல உட்காந்து
  நல்லா கவணிச்சு படிச்சு முடிச்சு
  வேலையை தேடிகிட்டு
  ராப்பகலெல்லாம் வெளிநாட்டானுக்கு
  வேலை செஞ்சு
  தேர்தல் ஒரு நாள் விடுப்புல
  அரசியல்வாதிகல திட்டிகிட்டே
  ஒரு குட்டித்தூக்கம் போடும் (அ) ஒருமுறை போட்ட
  என்னைப் போல ஆளை மனசுல வச்சு
  எழுதினதுங்க….
  யாரையும் குத்தம் சொல்ல எழுதினது இல்லீங்க,…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: