தகவல் அறியும் உரிமை சட்டம் : SETC

    நான் முதன் முதல்ல போட்ட பதிவில் (இங்கே) உள்ள சம்பவம் தான் என்னை “ஏன் இந்த தப்புல்லாம் நடக்குது?” ன்னு ஆராயத் தூண்டியது. பின்ன என்னங்க! நான் இது வரையில் பார்த்த SETC பேருந்துகள் எதுவுமே சரியாக பராமரிக்கப் படல. ஒரு சில கண்டக்டருங்க ரூ 160 /- டிக்கட்டுக்கு ரூ 200 /- கேக்குறாங்க, எண்ணு கேட்டா “சீட்டுக்கு 40 ங்கன்னு” சொல்றாங்க.
    இப்பிடில்லாம் தப்பு நடக்குதுன்னா, யாரோ ஒரு சில பேர் தன்னோட கடமைய செய்ய தவர்றாங்கன்னு தானே அர்த்தம். அதான் அதை எப்படி கண்டு புடிச்சு சுட்டிகட்டாறதுன்னு யோசிச்சப்ப தான் “தகவல் அறியும் உரிமை சட்டம்” பத்தி தெரியவந்தது. அதை வச்சு இப்போ படிப்படியா தகவல்களை சேகரிக்க ஆரம்பிச்சு இருக்கேன். கூடிய சீக்கிரம் ஒரு “பிடி” கிடைச்சதும் அதை பத்தி அப்றமா எழுதறேன்.
    இப்போ, தகவல் வேண்டி எப்படி விண்ணப்பிக்கறதுன்னு சொல்றேன்.
தேவையான விவரங்கள்:
௧. விண்ணப்பதாரரின் பெர்யர் மற்றும் முழு முகவரி.
௨. பத்து ரூபாய் “மனு ஸ்டாம்ப்பு” (Court Fee Stamp தான் ஈசியான வழி என்னை பொறுத்தவரை) அல்லது கேட்புக் காசோலை (DD).
௩. கேள்விகள் (தேவையான விவரம் தொடர்பாக).
௪. பொது தகவல் அலுவலரின் முகவரி. (இதை இங்கே கண்டு பிடிக்கலாம்)
௫. உங்கள் கையொப்பம்.
௬. இடம் மற்றும் தேதி. (தயவு செய்து இதை மறந்துடாதீங்க ரொம்ப முக்கியம். டிஸ்கி: அனுப்பும் பொது நான் தேதி போட மறந்துட்டேன், பதில் வர தாமதமாயிட்டுது.)
ஒரு வெள்ளைத் தாள்-ல மேல சொன்ன விவரங்களை எல்லாம் எழுதிடுங்க, அவ்வளோதான் RTI Application ரெடி.
முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
௧. விண்ணப்பம் நிச்சயமாக பதிவு அஞ்சல் (Register Post) அல்லது விரைவு அஞ்சல் (Speed Post) வழி மட்டும் தான் அனுப்ப வேண்டும்.
௨. சந்தேகம் ஏதாவது இருப்பின் உங்கள் ஊர் அருகே உள்ள தலைமை தபால் நிலைய அதிகாரியிடம் போய் கேட்டால் விவரங்கள் கிடைக்கும். (நான் எங்க ஊர் தலைமை தபால் நிலையத்துக்கு போனேன் உதவி செய்தார்கள்)
௩. பதிவு அஞ்சலில் அனுப்பிய பிறகு அதன் ரசீதையும், அதன் பின் வரும் ஒப்புதல் அட்டையையும் (Acknowledgement Card)  பத்திரமாக வைக்கவும்.
௪. அனுப்புவதற்கு முன்பாக உங்கள் விண்ணப்பத்தை ஒரு நகல் எடுத்து வைப்பது உத்தமம்.
அனுப்பின பிறகு முப்பது நாளுக்குள்ள உங்களுக்கு சட்டப்படி பதில் (அல்லது மறுப்புக் கடிதம் காரணத்துடன்) வரணும். அப்படி வரலன்னா முதல் மேல் முறையீடு, இரண்டாம் மேல் முறையீடு, புகார் கொடுக்கறதுன்னு சில வழிமுறைகள் இருக்கு. (எனக்கு இதுவரை இவைகளை முயற்சி பண்ண வேண்டிய அவசியம் வந்தது இல்லை).
Sample RTI Applications , எனது விண்ணப் பத்திற்கு வந்த பதில் கடிதம் போன்ற வற்றை இங்கே இந்த பதிவுடன் இணைத்துள்ளேன், பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

 

Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
இன்னொரு நான்! இல் பதிவிடப்பட்டது
9 comments on “தகவல் அறியும் உரிமை சட்டம் : SETC
 1. Chella Durai சொல்கிறார்:

  RTI பற்றி கூறிய செய்தி மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.
  மேலும் RTI மேல்முறையிடு பற்றி கூறவும்.

  • கிராமத்தான் சொல்கிறார்:

   நிச்சயமாக நண்பரே … இப்போது இன்னபிற வேலைகள் இருக்கிறது … கூடிய விரைவில் அதற்கும் ஒரு பதிவிடுகிறேன்….

  • devarajan சொல்கிறார்:

   தாலுக்கா அலுவலத்தில் மேல் முறையீடு எவ்வாறு செய்வது

   • கிராமத்தான் சொல்கிறார்:

    பொதுவாக துணை வட்டாட்சியரே தகவல் அலுவலராக இருப்பார். அவரிடமிருந்து தகவல் பெருவதில் சிக்கல் என்றாலோ, கொடுக்கப்பட்ட தகவலில் உங்களுக்கு மனநிறைவில்லை என்றாலோ, நீங்கள் வட்டாட்சியரை முதல் மேல்முறையீட்டு மனுவுடன் அனுகலாம். அவரிடமும் சரியான தகவல் பெறமுடியவில்லை என்றால், மாநில தகவல் ஆணையருக்கு இரண்டாம் மேல்முறையீடு செய்யலாம். மாநில தகவல் ஆணையரின் முடிவே இறுதியானது.
    தங்கள் ஊரின் அருகே உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தை அனுகினால் இதற்கு நேரடியாக உதவுவர்.

 2. Villageparty சொல்கிறார்:

  How can i contact you for RTI related Questions . i never done before .
  I am from chenani but i need village related issue .I am not looking for anything public this is for some one to help to get his right .so looking for kind a intial help from you.

  He is really stuggling a lot on revenue department .

  Thanks

 3. ஸ்ரீதர் சொல்கிறார்:

  உங்கள் பதிவு சிறந்தது…அர்த்தம் உள்ளது….உங்கள் உதவி எனக்கு தேவை….ஸ்ரீதர்…..ஈமெயில் அனுப்பி உள்ளேன்..ப்ளீஸ் பாருங்கள்….

 4. sulthan mohaideen சொல்கிறார்:

  thakaval ariyum urimai sattai

  any one know the address pls send me

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: