தனியார்மயமாகப்போகும் தண்ணீர்

விவசாயத்திற்காக தரப்படும் தண்ணீருக்கான மாணியத்தை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்படும் “தேசிய தண்ணீர் கொள்கை 2012”:
(இந்து நாளிதழில் 21-01-2012 அன்று வந்த இந்த கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்டது.)
ஒரு புதிய தண்ணீர் கொள்கையின் மீது மத்திய அரசு கலந்தாலோசனையை ஆரம்பித்துள்ளது. இக்கொள்கையானது, தண்ணீர் வழங்கும் சேவையை தனியார்மயம் ஆக்கவும், தண்ணீரின் விலையை அதற்கான திட்டங்களின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்திற்கு ஆகும் முழு செலவையும் மீட்டெடுக்கும் அளவுக்கு நிர்ணயிக்கவும் வழிவகை செய்கிறது.
நீர்வள நிபுணர்களின் ஆலோசைனைக்காக அனுப்பப்பட்ட இந்த 15 பக்க தண்ணீர் கொள்கையானது, நீர்வளத்துறையில் அரசின் பங்களிப்பினை தண்ணீர் சேவை வழங்குவதிலிருந்து திரும்பப் பெறுமாறு பரிந்துரை செய்கிறது. மாறாக, தனியாரும் பிற சமூகங்களும் தண்ணீர் சேவை வழங்குவதில் ஊக்குவிக்கப்படவேண்டும் என்று சொல்கிறது. இந்த திட்ட முன்மொழிவின் பொருளானது, கிராம மற்றும் நகர்ப்புறங்களில் தண்ணீருக்கு தீவிர விலையேற்றம் இருக்கும் என்பதாகும். இதனால் தண்ணீர் தகாத முறையில் பயன்படுத்தப்படுவது குறையும் என இக்கொள்கை அறிவுறுத்துகிறது.
இந்த வரைவுக் கொள்கையானது, விவசாயம் மற்றும் வீட்டுக்குரிய தண்ணீருக்கான அனைத்து விதமான மாணியங்களையும் ஒழிக்குமாரும், ஆனால் தனியாருக்கு நீர் மறுசுழற்சி செய்ய மாணியம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோருகிறது. மேலும், இது விவசாயிகளுக்கான மின்சார மாணியமும் குறைக்கப்பட வேண்டும் எனவும் இதனால் மின்சாரமும் தண்ணீரும் வீணடிக்கப்படுவது குறையும் எனவும் முன்மொழிகிறது.
உலக வங்கி பரிந்துரைகளுக்கு ஒத்த சிபாரிசு:
2005 இல் ஓர் உலக வங்கி அறிக்கை இதே போன்ற பரிந்துரைகளை செய்தது, இவ்வறிக்கையின் வாதப்படி “இந்தியாவுக்கு ஒரு நிலையான பொருளாதார வளர்ச்சி வேண்டுமானால், இந்திய நீர்நிலைகளின் பங்கானது கட்டமைப்பு மற்றும் ஒழுங்கமைப்பிலிருந்து, ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்குதல் மற்றும் பெரிய, சிறிய அளவிலான நீர் பயனீட்டாளர்களின் செயல்பாடுககளை ஒருங்கமைத்தலுக்கு மாற்றிக்கொள்ளவேண்டும்”. இவ்வறிக்கையின் பிற விஷயங்களினூடே “நீர்ப்பாசனம், நீர் மற்றும் சுகாதார சேவைகளில் சந்தைகளின் போட்டியை ஊக்குவிப்பது” போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.
இந்த வரைவுக் கொள்கையானது, எல்லா குடிமக்களுக்கும் உடல் நலம் மற்றும் சுகாதாரத்திற்கு குறைந்த பட்ச அளவு குடிநீரானது எளிதில் கிடைக்குமாறு உறுதிசெய்ய அரசுக்கு அழைப்பு விடுக்கிறது. எனினும், இவற்றை சட்டமாக்கி அடிப்படை உரிமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களுக்கிடையேயான நீர் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்க, இவ்வறிக்கையானது மத்தியில் ஒரு நிரந்தர தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
கடந்தகால அனுபவங்களிலிருந்து, பெரிய தண்ணீர் திட்டங்களினால் பயனடைந்த குடும்பங்களுக்கு ஒப்பிடத்தக்க அளவில் அத்திட்டத்தினால் இடம்பெயர்ந்தவர்களும் நன்மை அடைய வேண்டும் என்று இக்கொள்கை பரிந்துரைக்கிறது. உண்மையில், இக்கொள்கையானது தண்ணீர் திட்டங்களினால் பயனடைந்தோர் ‘தண்ணீருக்கு போதுமான விலை’ கொடுப்பதின் மூலம் அத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்கான செலவுகளை ‘ஓரளவு’ ஏற்கவேண்டும் என பரிந்துரைக்கிறது.
‘கடந்த  காலத்திலிருந்து அரசால் எதையும் கற்க முடியவில்லை’ என்று இந்த கொள்கை காட்டுவதாக ஹிமான்சு தக்கர் (an expert at the South Asia Network on Dams, Rivers and People) கூறுகிறார். மேலும் அவர், “நாட்டின் உயிர் நாடியான நிலத்தடிநீரினை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதில் முழு கவனம் செலுத்தியிருக்கவேண்டும்” என சுட்டிக்காட்டுகிறார்.
Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , ,
இன்னொரு நான்! இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: