பாட்டி சொன்ன கதை

ஒரு ஊரில ஒரு ராஜா இருந்தாராம் (எப்படி நம்ம startup) . அவருக்கு நிறைய நாள் குழந்தை செல்வம் இல்லாததால மனமுடைந்து கஷ்டப்பட்டாராம். ஒரு நாள் அவர் காட்டிற்கு செல்லும்போது ஒரு முயல் அடிபட்டு கிடந்துதாம், அதை பார்த்த ராஜாஅந்த முயலுக்கு மூலிகை இலைய அரைச்சு ஊத்தி குணப்படுத்தினாராம். திடீர்னு அந்த முயல் அழகிய தேவதையா உருவெடுத்ததாம். அதிசயப்பட்ட ராஜா, அந்த தேவதை சாப விமோசனம் அடைந்த கதைய கேட்டு தெரிஞ்சுகிட்டாரம். Asusual அந்த தேவதை என்ன வரம் வேண்டும் என கேட்க. நம்ம ராஜா என்ன கேட்டிருப்பார், வேறென்ன குழந்தயைதான். அந்த தேவதையும் “உனக்கு அழகிய பெண் குழந்தை பிறக்கும்” என வரம் தந்து மறைந்ததாம் .

தேவதை வரத்தின் படியே ராஜாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்ததாம். நிறைய நாள் கழித்து பிறந்ததினாலும், அவ்வளவு பெரிய ராஜாங்கத்திற்கு ஒற்றை வாரிசு என்பதினாலும், அனைவராலும் சீரும் சிறப்புமாக வளர்க்கபெற்றாள்

தன் மகள் திருமண வயதை அடைந்துவிட்டாள் , தகுந்த இடத்தில் வரன் பார்க்குமாறு ராணி ராஜாவிடம் கூறினாளாம். தனக்கு இருப்பது ஒரே மகள், தனக்குப்பின் தன் நாட்டை ஆள்கிற பொறுப்பும் தன் மருமகப்பிள்ளையையே சேரும் என்பதால், சுற்று வட்டாரத்தையே புரட்டிப்போட்டு மாப்பிள்ளையை தேடினாராம் ராஜா.

தான் தேர்ந்தெடுத்த இளவரசர்கள், ராஜாக்கள் அனைவரையும் அழைத்து பெரிய அளவில் சுயம்வரம் நடத்தினாராம். தன் மகளிடம் மாலையை கொடுத்து சுயம்வர திடலுக்கு அழைத்து வந்தாராம். இளவரசி மாலையுடன் நடந்து வந்த அழகைப்பார்த்து அனைவரும் மயங்கிப்போனார்களாம்.

இளவரசி தனக்கே மாலைடவேண்டுமென ஒவருவரும் மனதிற்குள்ளே பிராத்தனையே நடத்தினராம். இளவரசி விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களுடன் தேர் போல மெல்ல நடந்து ஒவ்வரு அரசனையும், இளவரசனையும் பார்வையிட்டாளாம். திடலில் கூடியிருந்த ஊர் மக்கள் அனைவரும் தங்களுக்கு வரப்போகும் புது அரசன் யார் என மிகுந்த ஆர்வத்தோடு பார்த்திருந்தனராம்.

ஆனால் இளவரசியோ வந்திருந்த யாரையும் பிடிக்காதலால் மாலையுடன் அப்படியே அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாளாம். வந்திருந்த அனைவரும் வருத்தத்தோடு சென்றுவிட்டனராம்

மிகவும் செல்லமாக வளர்த்த பெண் என்பதால் ராஜா கோபம் கொள்ளாமல் அதே போல் மற்றுமொரு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தாராம். அதிலும் இளவரசிக்கு யாரையும் பிடிக்கவில்லை. இருந்தாலும் ராஜா சோர்வாகாமல் தன் மகளுக்கு பிடித்தவாறு மணமகனை தேடிக்கொண்டே இருந்தாராம்.

நாட்கள் செல்ல செல்ல ராஜா நோய்வகபட்டு படுக்கையில் விழுந்தாராம், தான் இறந்துவிடப்போகிறோம் என அறிந்து இளவரசியை அழைத்து அவளுக்கு திருமணம் ஆகாதது குறித்தும், தனக்கு பின் தன் நாட்டை ஆள்வது யார் என்பதை பற்றியும் கவலை தெரிவித்தாராம்.

தந்தை மரணப்படுக்கையில் துன்பப்படுவதை பார்த்த இளவரசி, தனக்கு திருமண ஆகும் வரை தானே நாட்டை ஆள்வதாக ராஜாவிடம் வாக்கு கொடுத்தாளாம். இறக்கும் தருவாயில், தெற்கே சோமனாதபுரத்தை ஆள்கிற மயிலவாணன் என்கிற இளவரசர் வருவார் என்றும், இளவரசிக்கு பிடித்த்ருந்தால் அவரை திருமணம் புரிந்து நீடூடி வாழ்க எனக்கூறி கண் மூடினாராம்.

அதன்பின் இளவரசி ஆட்சிப்பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்றினாளாம். ஒரு நாள் சோமநாதபுர அரசர் ராணியை காணவந்திருக்கிறார் என காவலாளியிடமிருந்து செய்திவந்ததாம் ..

அப்பறம் அப்பறம் ….

 
அப்பறம் தான் நான் தூங்கிட்டேனே :)))
 

 

Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , , , ,
மாற்றான் தோட்டத்து மல்லிகை இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: