மங்காத்தா : விமர்சனம்

‘தல’யின் 50 வது படம் என்ற உற்ச்சாகம். 500 கோடியை மெக்குபினாக வைத்து நெய்யப்பட்ட விளைட்டுதான் “மங்காத்தா” என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற எதிர்பார்ப்பு. இதையெல்லாம் வெங்கட் பிரபு அவருடைய ஸ்டைலில் நிவர்த்தி செய்ய முயன்று இருக்கிறார்.
 
படத்தில் அஜித்தின் என்ட்ரி அட்டகாசம்! (இந்த அட்டகாசத்துக்காக அவர் சஸ்பென்ட் ஆவது வேறு விஷயம்) முதல் 15 நிமிட அமளி துமளிக்குப் பிறகு அரங்கமே அமைதியாகிறது, நானும் சேர்ந்து அமைதியாகி விட்டேன்.
 
5 கோடியை கைப்பற்றிய கையேடு அறிமுகமாகின்றார் அசிஸ்டன்ட் கமிஷனர் “ஆக்க்ஷன் கிங்”. பிறகு, IPL இறுதிப் போட்டியில் பெட் கட்டுவதற்காக வரும் 500 கோடியை பிரித்து அனுப்பும் வேலை செட்டியாருக்கு வருகிறது. அந்த பணத்தை ‘மடக்க’ அர்ஜுனின் போலிஸ் குழுவும், அந்த பணத்தை ‘அடிக்க’ பிரேம்ஜி உள்ளிட்ட பசங்க (?) குழுவும் திட்டம் போடுகிறது. அப்புறம் என்ன ஆச்சு என்பது மீதிக்கதை (அஸ்கு புஸ்கு தியேட்டருக்கு போய் பாத்துகோங்க).
படத்தின் ஓட்டத்தை இழுத்து புடிச்சு நிறுத்துவதற்கென்றே பாடல்களை வச்சுருப்பாங்க போல. ஓரிரு பாடல்களை தவிர மற்ற பாடல்கள் நீளமாக தோன்றுகின்றன.
இடைவேளைக்கு கொஞ்சம் முன்னாடி வருகிற அஜித்தின் மாஸ்டர் பிளான் (அதாவது எல்லாரையும் கொன்னுட்டு பணத்த எப்டி தூக்கலாம் என்ற பிளான்) இமாஜினேஷன்கள் மொக்க காமெடி, ஆனால் பின் பாதியில் உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பது எதிர்பாக்காத திருப்பம்.
எப்புடியும் இந்நேரம் பல பிளாக்கர்கள், “wild things ” படத்தோட காப்பி தான் மங்காத்தா என திட்டி தீர்த்து இருப்பாகள். என்ன பண்றது படமும் அப்டி தானே இருக்கு.
ம்ம்ம்ம்…. அந்த மூனு நாலு பொண்ணுங்க (திரிஷா, அஞ்சலி, லக்ஷ்மி ராய், ஆண்ட்ரியா) பத்தி சொல்ல மறந்துட்டேன். நாலுமே சூப்பர் பிகருங்க, படத்துல அப்பபோ வந்துட்டு போவாங்க.
மற்றபடி, மங்காத்தா பத்தி சொல்லனும்னா… அர்ஜுன் போலிஸ் டிப்பார்ட்மென்ட்டுக்கு “உள்ளே” இருந்தும், அஜித் சஸ்பென்ட் ஆகி “வெளியே” இருந்தும் ஆடும் “உள்ளே – வெளியே” ஆட்டம்தான் இந்த “மங்காத்தா”.

 

Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , , , ,
இன்னொரு நான்! இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: