வெள்ளி இடைமறிப்பு

    அதிசயங்கள் பற்றி நம்ம நிறையவே கேள்விப்பட்டு இருப்போம். அதெல்லாம் ஏதோ பெரிய மாமேதைகள் படைச்சதாகவும், அதெல்லாம் உள்ளுர்லியோ இல்ல கண்ணுக்கு எட்டின தூரத்திலையோ இருக்காதுன்னு நம்மல்ல பலர் நினைக்கிறது உண்டு. ஒரு சில நேரம், நம்ம கண்ணுக்கு நேரா நடக்குற பல அதிசய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை நாம கண்டுக்கறதே இல்ல. அப்டிப்பட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம் தான் இந்த “வெள்ளி இடைமறிப்பு” அதாவது “Venus Transit”. வெள்ளி கோளானது நமக்கும் சூரியனுக்கும் நடுவுல இருக்கு. அதனால, புவி, வெள்ளி மற்றும் சூரியன் ஒரு கோட்டில் சந்திக்கும் போது (பேசமுடியவில்லையே…! ப்ரீயா விடுங்க தொடர்ந்து படிங்க) புவியில வெள்ளி கோளோட நிழல் விழுது இதுதான் “Venus Transit”. சரி, இதிலென்ன முக்கியத்துவம்னு கேக்றீங்களா?! இந்த நிகழ்ச்சிய பாக்றதுக்கு விஞ்ஞானிகள் பட்ட பாட்ட கேட்டா உங்களுக்கே புரியும்.

 
    1631 ல, கெப்ளர் சுரியக்குடும்பத்தோட அமைப்ப கணிச்சாரு. அப்புறம் 1760 களில், சூரியனுக்கும் புவிக்கும் உள்ள தூரத்தைஅளக்கரதையே லட்ச்சியமா வச்சுகிட்டு சுத்துன பல விஞ்ஞானிகளில் பிரான்சைச் சேர்ந்த “லே கெண்டில்”லும் ஒருத்தர். அவர் 1761 ல நடக்கப் போற வெள்ளி இடைமறிப்ப பாக்கணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணுனார். ஆனா அந்த நேரத்துல பிரான்சும், இங்கிலாந்தும் மூன்றாம் கர்நாடகப்போர் (1756 1763) சண்டைல இருந்தாங்க. அதுனால நம்ம “லே கெண்டில்” மொரிஷியஸ்லையே தங்கிட்டாரு. அதனால வெள்ளி இடைமறிப்ப ஒழுங்கா பாக்க முடியல. 1769 ல இந்த நிகழ்ச்சி திரும்ப நடக்ரதாக இருந்துச்சு, சரி இந்த தடவ தவற விட கூடாதுன்னு நம்ம ஆளு மடகாஸ்கர்லையே தங்கிட்டாரு. அவரு நெனைச்ச மாதிரியே 1769 ல பாண்டிச்சேரி வந்து பாத்தாரு, ஆனா மிதமிஞ்சிய மேகக் கூட்டம் இருந்ததால இந்த தடவையும் அவரு ஆசைல மண்ணு விழுந்திரிச்சு. இந்த நேரத்துல இங்கிலாந்தை சேர்ந்த “ஜான் குக்”ன்றவரு (தெற்கு பசிபிக் கடல்ல இருக்குற) தகிதிங்கற தீவுல இருந்து இந்த நிகழ்ச்சிய பதிவு செஞ்சாரு. இவுரு தயவால்தான் “வானவியல் அலகு” மற்றும் “சூரியக்குடும்பத்தின் அளவை” கணிக்க முடிஞ்சது.
 
 
    என்னடா இது, வெள்ளி கிரகம் குருக்காப்ல போறதுக்கும், சூரியக்குடும்பத்தோட அளவை கணிக்கரதுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு வேளை இது பெரிய்ய விஞ்ஞானிகளால் தான் முடியுமோன்னு நெனைக்காதீங்க. இப்போல்லாம் அதை மாணவர்களுக்கு “Project”ட்டா கொடுக்குறாங்க. இங்க சொடுக்கி பாருங்க. இதுக்குன்னு “iPhone App”லாம் இருக்குங்கறாங்க. 
 
    இதெல்லாம் கூட விடுங்க, கிமு 3 ம் நுற்றாண்டில் புவியின் அளவை எப்டி அளந்துருப்பாங்க?! யோசிங்க ….! விருப்பம் இருக்குறவங்க இதைப்படிங்க (இங்கே சொடுக்குக). படிச்சு முடிச்ச உடனே “அட எப்டில்லாம் யோசிச்சு இருக்காங்க பாரேன்!!”ன்னு நீங்களே வியந்து போவிங்க பாருங்க.
 
Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , ,
இன்னொரு நான்! இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: