குறள் வானம்

கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இருக்கிற பத்து குறட்பாக்களில் சில நுட்பமான செய்திகள் காணப்படுகின்றன.

கடவுளுக்கு பல்வேறு பெயர்களை சூட்டிப் பார்க்கிற வள்ளுவர் ஒவ்வொரு பெயரிலும் ஒரு நுட்பத்தை ஒளித்து வைக்கிறார். ஒரு குறளில் கடவுளை வேண்டுதல் வேண்டாமை இலான் எனக் குறிப்பிடுகிறார். இந்த “வேண்டுதல் வேண்டாமை இலான்” என்னும் தொடர் ஆழ்ந்த பொருளுடையது. பொதுவாக நாம் எந்த பொருளின் மீதும் விருப்பு வெறுப்பு கூடாது என்று சொல்கிறோம்.

    பற்று நீங்குதல் என்றால் அந்தப் பொருளின் மீது அல்லது அந்த மனிதனின் மீது நமக்கு இருக்கிற விருப்பத்தை விலக்கிக்கொள்ளுதல் என்று மட்டும் பொருள் ஆகாது. ஒரு பொருளின் மீது விருப்பு இருக்கக் கூடாது என்பது எப்படி சரியோ அது போல எந்தப் பொருளின் மீதும் நமக்கு வெறுப்பு இருக்கக் கூடாது என்பதும் சரி.

    விருப்பம், அதனை அடைய வேண்டும் என்று தூண்டுகிறது. வெறுப்பு, அதனிலிருந்து நீங்க வேண்டும் என்று நம்மை பிடித்து தள்ளுகிறது.

ஒரு பொருளைப் பற்றி அல்லது ஒரு மனிதனைப் பற்றிக் கவலைப்படாத மனமே சமநிலையில் உள்ளது என்பது தெளிவானது. ஒன்றை அடையவேண்டும் என்று நினைப்பதோ, ஒன்றிலிருந்து நீங்க வேண்டும் என்று நினைப்பதோ இரண்டும் விருப்பங்கள்தான்.

    அடைய வேண்டும் என்று கருதுவதுதான் விருப்பம் எண்டு நாம் நினைக்கிறோம். அதில் இருந்து விலக வேண்டும் என்பது இன்னொரு விதமான விருப்பம்தான்.

எனவே, விருப்பு வெறுப்பு இரண்டும் அற்ற நிலையைத்தான் சமநிலை என்று சொல்கிறோம்.

    அந்தச் சமநிலையை மனிதர்களால் இயல்பாக அடைய முடியாது. மனிதர்களுடைய பண்பே விருப்பு வெறுப்புகளுக்கு உட்படுவதுதான். அதுதான் சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கும் உரியது.

    விருப்பத்தை குறைத்துக் கொள்ளலாம். வெறுப்பைக் குறைத்துக் கொள்ளலாம். எந்த அளவில் குறைத்துக் கொள்ளலாம் என்பதைத் தவிர, முற்றிலுமாய் நீக்கி விடுதல் என்பது நமக்கு இயலாத ஒன்று. ஆனால், அப்படி யாருக்கு இயலுகிறதோ அவனே இறைவன் என்று மறைமுகமாக சொல்ல வருகிற வள்ளுவர்,

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல


என்று சொல்கிறார்.

    அப்படி எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாத ஓர்  இடத்திற்குப் போய்ச் சேருகிற நிலையில்தான் துன்பம் என்பது என்றைக்கும் இல்லாமல் போகும்.

துன்பம் எதனால் வருகிறது? ஆசையினால். நாம் அப்படித்தான் ஒரு கருத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

    Desire is the root cause of all miseries என்று புத்தர் சொன்னதைப் பலரும் கூறுகின்றனர். ஆனால் அவர் ஆசையை மட்டும் குறிப்பிடவில்லை. அறியாமை மற்றும் ஆசையின் விளைவே துன்பம் என்கிறார் புத்தர்.

    உலகத்தின் அனைத்து துன்பங்களுக்கும் ஆசைதான் காரணமா? ஆசை மட்டும் காரணமன்று. வெறுப்பும் கூடக் காரணம்.

    ஒன்றின் மீது நாம் வைக்கிற ஆசை நம்மை எப்படி அலைக் கழிக்குமோ, அது போல இன்னொன்றின் மீது வைக்கிற வெறுப்பும் நம்மை அலைகழிக்கும்.

    விருப்பும் வெறுப்பும் அற்ற மனநிலைக்கு உயர்வது என்பது இறைவனை நோக்கி நகர்வது என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

    இறைவன் என்று ஒருவர் இருக்கிறார், இல்லை என்கிற வாதங்களை எல்லாம் தாண்டி, இறைநிலை என்று ஒன்று இருக்குமானால் அதை நோக்கி நகர்வது எப்படி என்பதே வள்ளுவம் கூறும் செய்தி. அதனால்தான் வள்ளுவர் அடுத்த குறளில் இறைவனைப் “பொறிவாயில் ஐந்து அவித்தான்” என்கிறர்.

    ஐம்புலங்களையும் யாரால் அவிக்க முடிகிறதோ அது இறை நிலை.

    மனிதர்களுக்கு வள்ளுவர் அப்படிச் சொல்கிறாரா? இல்லை. பின்னல் வருகிற ஒரு குறளில் அதைத் தெளிவாகவே வள்ளுவர் விளக்கிக் காட்டுகிறார்.

                                “ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல்”

என்கிறார்.

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , , , , , , , , , ,
மாற்றான் தோட்டத்து மல்லிகை இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,171 other followers

%d bloggers like this: