கலந்துகொள்ளாத ஒரு சந்திப்பில்!

மொதல்ல

ஒருவர்: இந்தியாவுக்கு தேசிய சமயம் என்று ஒன்று தேவையில்லை. இந்தியா சமய சார்பற்ற நாடு.

மற்றொருவர்: சரியாகச் சொன்னீர்கள் நண்பரே, சமயம் என்பது நம்மை நல்வழிச் செல்லுமாறு பக்குவப்படுத்துவது (சமைத்தல்). அனைத்து சமயங்களும் வெவ்வேறு முறையில் மனிதன் தன்னைப் பக்குவப் படுத்திக்கொள்வது எப்படி என்றுதான் சொல்கின்றன. இந்தியா என்பது பல சமயங்கள் இருக்கும் நாடு. தேசிய சமயம் என்று ஒன்றை வைத்தால் அது மற்ற சமயங்களுக்கு இந்தியா தகுந்த மதிப்பளிக்கவில்லை என்ற கூற்றுக்கு இடம் தரும். இங்கு பல வித சமயங்கள் இருப்பதை கருத்தில் கொண்டுத்தான் நவீன இந்தியாவின் சிற்பிகள், கிபி 1950 ல் இந்தியா ஒரு சமயசார்பற்ற நாடு என்று அறிவித்தனர். எனவே இந்தியாவுக்கு தேசிய சமயம் என்று ஒன்று தேவையில்லை.

மூன்றாமவர்:சரிதான் சரிதான்.

அப்புறம்

ஒருவர்: இந்தியாவுக்கு தேசிய “சாதி” என்பது கிடையாது, இந்தியாவின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக விளங்கும் பல காரணங்களுள் சாதீயமும் ஒன்று.

மற்றொருவர்: நண்பர் அற்புதமாகச் சொன்னார், பிறப்பினை அடிப்படையாகக் கொண்டு இவன் இந்தத் தொழில்தான் செய்யவேண்டும் என்று சொன்ன காலமெல்லாம் போய்விட்டது. அதாவது வேலைப் பங்கீட்டின் (Division of labour) மூலம் உற்பத்திப் பெருக்கமடையும், உற்பத்தி அதிகமானால் பொருளாதாரமும், மக்களின் வாழ்வும் மேம்படும் என்பது பொருளாதாரம் (Economics). இதனடிப்படையில்தான் சாதிகள் தோன்றின என்றும் சிலர் கூருகின்றனர். அப்படியே பார்த்தாலும் பொருளாதார சித்தாந்தத்தில் குறிப்பிட்ட ஒரு தொழில் செய்பவர் உயர்த்தொறேன்றும் மற்றவர்கள் தாழ்ந்தோறேன்றும் சொல்லப்படவில்லை. ஆனால் இன்றோ சாதீயம் என்பது மக்களுக்குள் உயர்வுதாழ்வு பாராட்டும் கருவியாக கொள்ளப்படுகிறது. சமூக வாழ்வில் மக்கள் ஒருவருக்கொருவர் ஒன்று பட்டும் உதவியாகவும் இருப்பதே மேம்பட்ட சமூகத்திற்கு எடுத்துக்காட்டு. இன்றோ சமூக வாழ்வின் முதல் படியான திருமணத்தை முடிவு செய்வதே சாதி என்றாகிவிட்டது, பிறகு எப்படி ஒற்றுமை, உயர்வெல்லாம்?!. மேலும் சமூகம் என்ற சொல்லே ‘மக்கள் கூட்டத்துக்கு’ பதிலாக ‘சாதிக் கூட்டத்தினை’ குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மக்களிடையே பிரிவை உண்டாகுகிறது, நாட்டின் உயர்வை தடுக்கிறது.

மூன்றாமவர்: ம்ம்ம்ம்ம்… இது பேசத்தான் சரியாய் இருக்கும்.

கடைசீயில

ஒருவர்:இந்தயாவுக்கு தேசிய மொழி என்று ஒன்று தேவை இல்லை. தேசிய ஒற்றுமையை குலைக்கும் பல காரணிகளில் மொழிவாதமும் ஒன்று.

மற்றொருவர்:மிக்க சரி, இந்தியா என்பது பல மொழிகள் பேசப்படும் நாடு, இந்தியாவின் பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டே “இந்தியத் துணைக்கண்டம்” என்று வழங்கப் பட்டுவருகிறது. தெரிந்தோ தெரியாமலோ இந்தியா என்ற நிலப்பரப்பினை அரசியல் ரீதியில் ஒன்றினைத்ததில் ஆங்கிலேயரின் பங்கு அதிகம். மேலும் இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே ஆங்கிலத்தில் எழுதப்பட்டுத்தான் பின் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. எனவே இந்தியாவின் உண்மையான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இன்றவும் இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் தேசிய மொழி என்று ஒரு மொழியை அறிவித்தால் அது மற்ற மொழிகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றாகிவிடும். எனவே இந்தியாவுக்கு தேசிய மொழி தேவையில்லை.

மூன்றாமவர்: அதெப்படி!! தேசிய அடையாளம் என்று ஒன்று வேண்டாமா? இந்தி மொழியை கற்பதில் உங்களுக்கென்ன சிரமம். அதை தேசிய மொழியாக்கினால் என்ன கெட்டுப்போய்விடும்?! எவனோ ஒரு ஆதிக்கவாதியின் மொழியான ஆங்கிலத்தைக் கற்பீர்கள் ஆனால் சகோதர மக்களான வட நாட்டினர் மொழியை கற்க மாட்டீர்களா?!

அந்த மற்றொருவர்: ஒரு மொழிதான் தேசத்தின் அடையாளமாக விளங்க வேண்டும் என்று அவசியமா என்ன?! ஏன் ஒரு சமயமோ சாதியோ கூட அடையாளமாக இருக்கலாமே! மேலும் ஆங்கிலேயர்கள் நீங்கள் சொல்வது போல ஆதிக்க வாதிகள்தான், அதனால்தான் ஆங்கிலம் கற்றாலொழிய அவர்களிடம் பிழைப்பது அரிதாக இருந்தது. அதேபோல இந்தி கற்றால்தான் இந்தியாவில் பிழைக்க முடியும் என்றால் அது மற்றொரு வகையான ஆதிக்கம் தானே?! இணைப்பு மொழி (Lingua franca) என்று புதிதாக ஒன்றை திணிப்பதை விட, ஏற்கனவே இருப்பதை ஏற்றுக்கொள்வது எளிமைதானே?!

#நான் கலந்துகொள்ளாத ஒரு சந்திப்பில் நடந்த பேச்சுவார்த்தைகள்.

Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , , , , , , , , , ,
இன்னொரு நான்! இல் பதிவிடப்பட்டது
2 comments on “கலந்துகொள்ளாத ஒரு சந்திப்பில்!
  1. இசையாளன் (@Isaiyalan) சொல்கிறார்:

    இந்தி எவனுக்கு வேணுமோ அவன் படித்துக்கொள்வான். அத விட்டுட்டு நாட்டு பற்றுக்கும் மொழிக்கும் முடிச்சு போடக்கூடாது.
    இந்தி மொழி மட்டும் தெரிஞ்ச மக்கள் இந்தியை வைத்துக்கொண்டே இந்தியா முழுதும் எந்த இடையூறுமின்றி வாழ/சுற்றி வர, மற்ற மொழி பேசும் மக்கள் அவங்க தாய்மொழி போக இந்தி மொழிய வேற கற்றுக்கொள்ள வேண்டுமாம். எந்த ஊர் நியாயம். சரி இந்த இந்திய படிச்சா மட்டும் போதும், வேலை வாய்ப்புக்கு ஒரு குறையும் இருக்காதுன்னு நிலைமை இருந்தாவாவது இத ஒத்துக்கலாம், அதுவும் இல்ல. தாய் மொழி கல்வி, வேலை வாய்ப்புக்கு ஆங்கிலம், இது போக இந்தி மொழி வேற.
    இந்த நியாயத்தை சொன்னா நம்மள பிரிவினைவாதிங்கிறாங்க 😦

  2. கிராமத்தான் சொல்கிறார்:

    //இந்த நியாயத்தை சொன்னா நம்மள பிரிவினைவாதிங்கிறாங்க// 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: