சிவா மூன்று நெடுங்கதைத் தொகுதி (Shiva Trilogy by Amish T)

1. The Immortals of Meluha

2. The Secrets of Nagas

3. The Oath of Vayuputra

என்கிற இந்த மூன்று ஆங்கிலப் புதினங்களை பற்றிய விமர்சனம் இது. முதல் இரண்டு புத்தகங்கள் செம்மையாக இருந்தது அனைவரும் அறிந்ததே. இது இந்தியாவின் “ஹாரி பாட்டர்” எனப் பலராலும் பாராட்டப்பட்டது. இவ்விமர்சனம் குறிப்பாக மூன்றாம் புத்தகமான The Oath of Vayuputra-வைப் பற்றியது.

இந்த புத்தகம் (The Oath of Vayuputra) பல எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டுள்ளது. முதல் சில அத்தியாயங்கள் கதையின் ஒரு சில திருப்பங்களை ஊகிக்க வைக்கிறது. நடுவே வரும் சில அத்தியாயங்கள் கொட்டாவி விட வைத்ததும் உண்மையே! கடைசி சில அத்தியாயங்கள் இதற்கு நேர்மாறாக கண் விழிக்க வைத்தது. தெரியாத்தனமாக இரவு பதிணொரு மணி போல கடைசி அத்தியாயங்களை படிக்க ஆரம்பித்தேன் முடிக்காமல் தூக்கம் வரவில்லை. கிட்டத்திட்ட அதிகாலை இரண்டறை மணி ஆகிப்போனது முடித்துவிட்டு தூங்க. கனவில் இளவரசி ச(க்)தியின் தொல்லைதான்.

முடிக்கும் போது கார்த்திகேயன் தென்னோக்கிச் சென்று சங்கத்தமிழை வளர்த்ததாகவும், காளி வடகிழக்குக்கு சென்று திரிபுராவையும் மணிபூரையும் உருவாக்கியதாகவும், பத்தோடு பதிணொண்ணு அத்தோட இது ஒண்ணு-ன்னு திபெத்தையும் லாசாவையும் லாமாவையும் கதைக்கு உள்ளே இழுத்துப் போட்டு முடிக்கிறார் அமிசு.

இத்தனை சாமர்த்தியமாக, கதையை மூன்று புத்தகங்களில் சுவாரசியம் குறையாமல் சொல்லியிருக்கிறார். சில வரலாற்று உண்மைகளையும் சில இந்து சமய நம்பிக்கைகளையும் இக்கதையைப் படிக்கிறவர்கள் நம்பும்படி கோர்த்துவிட்டு வாங்கியிருக்கிரார். இதற்காக இவர் பல தேடல்களையும் மற்றும் ஆராச்சிகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும். அம்முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

யாருக்குத்தெறியும், “ராமாயணம், ஸ்ரீகிருஷ்ணா, ஜெய் அனுமாண்” போன்ற 90-களில் வெளிவந்த தொலைக்காட்சி நிகழ்சிகள் மூலமாக பெரும்பாண்மை மக்களினூடே இந்துத்துவத்தை வளர்த்தது போல, இந்த புதினம் படித்த மேல்தட்டு மக்களினூடே “இந்து” மருந்தை ஏற்ற பயன்படலாம்.

எது எப்படியோ, நிச்சயமாக எனக்கு இந்த புத்தகம் நல்ல பொழுது போக்காக இருந்தது, எழுதிய அமிசுக்கு பெரிய நன்றி!!! அடுத்ததா மகாபாரதம் எழுதப் போரதாக ஒரு துப்பு கொடுத்திறுக்கிரார், ஆர்வமாக எதிர்பார்க்கிரேன்.

Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
இன்னொரு நான்!, படித்தது இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: