ரிலையன்ஸ் நெட்கனக்ட்-ஐ உபுண்டுவில் இணைப்பது எப்படி? (How to connect/Troubleshoot Reliance NetConnect+ in Ubuntu 12.04)

நேற்று நான் ரிலையண்சு நெட்கனக்ட் பிளஸ் யூ.எஸ்.பி மோடம் வாங்கினேன். என்னுடைய மடிகணிணியில் உபுண்டு மட்டுமே உள்ளது. கடைக்காரரிடம் விசாரித்தேன், அவரோ

“லினக்ஸ் என்னங்க காத்துலையும் கடல்லயும் போட்டா கூட நெட்கனட் பிளஸ் வேலை செய்யுமுங்க” என்றார்.

வீட்டுக்கு போயி முயற்சி பண்ணி பாக்ரேன் ஒன்னுமே நடக்கல. என்னடா இதுன்னு ரோதணையாப் போச்சேன்னு ரிலையன்சு-காரங்கிட்ட போன் பண்ணி கேட்டா

“நீங்க டெலிவெரிபிகேசன் (அதாவது அவிங்கே போன் பண்ணி கேக்கும் போது உங்க முகவரிய சொல்லனும்) பண்ணுணாதான் நாங்க ஆக்டிவேட் பண்ணுவோம்”

ன்னு சொல்லிட்டாங்க.

“சரிடா என் முகவரிய சொல்ரேன் சரிபாத்துக்க”

ன்னு சொன்னேன். அதுக்கு அவன்,

“உங்க முகவரியே எங்க டேட்டா பேசுல காணும், நீங்க எந்த கடைல நெட்கனக்ட் வாங்கினீங்களோ அங்க போயி உங்க முகவரிய எங்க டேட்டா பேசுல ஏத்த சொல்லுங்க”ன்னு சொல்லி வச்சுட்டான்.

‘அடப்பாவி காத்து கடல்ன்னுலாம் பேசுனியே கடைசில கடைசில கவுத்துட்டியே’ன்னு அவன திட்டிகிட்டே படுத்து தூங்கிட்டேன்.

மறுநாள் அந்த கடைக்கு போனேன்,

“என்ன ஞாபகம் இருக்கா?” ன்னு கேட்டதுக்கு

“இருக்கு சார், சொல்லுங்க” ன்னான்.

நடந்த்த சொன்னேன், போயி டேட்டா பேசுல என் முகவரிய ஏத்துனான். அப்புறம் டெலிவெரிபிகேசன முடிச்சேன். ஆக்டிவேட் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க, ஆனா என் மடிகணிணியில அது வேலை செய்யல.

“வீட்டுக்கு போங்க சார் இன்னும் ஒரு மணி நேரத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடும்… அப்றம் நான் கடையயும் சாத்தனும்…”ன்னு இழுத்தான். சரின்னு நானும் வந்துட்டேன்.

ஒரு நன்பனின் விண்டோஸ் கணிணில போட்டு முயற்சி பண்ணேன், பொசுக்குன்னு வேலை செஞ்சுது. அப்றம் என் உபுண்டு-லயும் வேலை செஞ்சுது. முன்னாடி என்ன பிரச்சனைன்னு பாத்ததுல சில விசயங்கள் தெரிய வந்துச்சு.

முதல் பிரச்சனை நான் கொடுத்த பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல். முதல்ல என் டேட்டா கார்டோட பத்து இலக்க எண்ணை பயன்படுத்தியிருந்தேன். அது தப்பு. பயனர் பெயர் net கடவுச்சொல்லும் அதே. இதுதான் சரி.

இரண்டாவது பிரச்சனை ஆக்டிவேசன். விண்டோசுல டேட்டா கார்டு அதுவா (சி.டி டிரைவ் போல) மவுண்டாகும் ஒரு மென்பொருள் தானா நிறுவப்படும். பிறகு அந்த மென்பொருள் *228 க்கு போன் பண்ணும் அப்றம் ஆக்டிவேட் பண்ணும். இது ரிலயண்சு-காரங்களுக்கு தெரியவரும் அப்றம் அவுங்க நமக்கு போன் பண்ணி முகவரிய உறுதிப்படுத்துவாங்க (டெலிவெரிபிகேசன்). ஆனா உபுண்டுல அந்த மென்பொருள் நிறுவப்படலாம் படாமலும் போகலாம். அதுனால நாமதான் ரிலயண்ஸ்-காரங்களுக்கு போன்பண்ணி டெலிவெரிபிகேசன் பண்ணனும். அப்பதான் நம்ம இணைப்பு ஆக்டிவேட் ஆகும்.

நான் எப்படிப் பண்ணிணேன்னு படம் புடுச்சி காட்டிருக்கேன் கீழே, படம் சரியா தெரியலைண்ணா அந்த படத்து மேலயே சொடுக்குங்க.

NetConnect1

NetConnect2

NetConnect3

NetConnect4

NetConnect5

NetConnect6

Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , ,
இன்னொரு நான்! இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: