1.விதியுடனான சந்திப்பு

“நம்முடையகனவுகள் இந்தியாவுக்கானது மட்டுமல்ல இவ்வுலகினுக்கானதும்தான். இன்று மக்கள் உலகைவிட்டு தனித்து வாழ முடியாத அளவுக்கு பினைக்கப்பட்டுள்ளனர்எனவே ஒருமையாகிப் போன இவ்வுலகைவிட்டு அமைதியை பிரிக்க இயலாது அதேபோல்தான் சுதந்திரத்தையும் செழுமையையும் மற்றும் ஆபத்தையும் பிரிக்கமுடியாது.”

என இந்திய விடுதலைநாளன்று ‘விதியுடனான போராட்டம்’ என்ற உரையில் இந்தியாவிற்காக மட்டுமல்லாது இவ்வுலகினுக்காகவும் பேசினார் நேருஇது ஒருவகையில் ஆச்சரியப்படுவதற்கில்லை ஏனெனில் பலநூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல பகுதிகளுடன் இந்தியா தொடர்பிலேயே இருந்துவந்துள்ளது.

இன்றோ முன்னெப்போதும் இல்லாதவாறு உலக மக்கள் பிணைக்கப்பட்டுள்ளனர். நாம் நியூ யார்க்கில் இருந்தாலும் சரி சென்னையில் இருந்தாலும் சரி நம்முடைய நாட்டின் அடிப்படையில் மட்டுமே சிந்திப்பது முடியாது. உலகமே ஒரு குடும்பமானது போல, மக்கள், பொருட்கள், சிந்தனைகள் என அனைத்துமே நாடுகளின் எல்லைகள் தாண்டி சென்று-வந்துகொண்டிருக்கின்றன. அதேநேரம் பிரச்சனைகளும் அந்தந்த நாட்டின் எல்லைக்குள் கட்டுண்டு இல்லாமல் எல்லை தாண்டிய மற்றும் பல நாடுகளுக்கும் பொதுவான பிரச்சணைகளாக ஆகியிருக்கின்றன. தீவிரவாதம், பேரழிவு ஆயுதங்கள், சுற்றுச்சூழல், நோய்கள், பஞ்சம், மனித உரிமை, எழுத்தறிவின்மை மற்றும் மக்களின் இடப்பெயர்ச்சி போன்றவை அதுபோன்ற நாடுகளற்ற பிரச்சணைகளுள் சில. இப்பிரச்சணைகளுக்கான தீர்வுகளும் எல்லைகளற்று பல நாடுகள் சேர்ந்தே தீர்க்க வேண்டியதாக உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் ‘வெளியுறவுக்கொள்கை’ என்பது வெளிநாடுகளை மட்டுமே பாதிக்கக் கூடியதல்ல, உள்நாட்டிலுள்ள மக்களையும் பாதிக்கக்கூடியது. அது வாய்ப்புகளை கைப்பற்றக் கூடியதாகவும், ஆபத்துகளை கணக்கில் கொண்டு மக்களை பாதுகாக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்திய வெளியுறவுக்கொள்கை எப்படி அமைய வேண்டும்? உலகத்தைப் பற்றிய இந்தியாவின் பார்வை என்ன? இவ்வுலகுக்கு இந்தியா தரும் அமைதி என்ன?

கவனிக்க: சசி தரூர் எழுதிய “இந்திய அமைதி” (Pax Indica) என்ற புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட சில குறிப்புகளின் தொகுப்பே இக்கட்டுரை.

Advertisements

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

Tagged with: , , , , , , , , , , , ,
இந்திய அமைதி, படித்தது இல் பதிவிடப்பட்டது
முகம்
கிராமத்தான்

கிராமத்தான்

ஓர் இனிய எளிய இந்தியக் குடிமகன்.

View Full Profile →

கீச்சுலகில்
என் புத்தக அடுக்கில்
தற்போதைய ஆக்கிரமிப்பு

கிராமத்தானின் புதிய தேடல்கள் பற்றி அறிய தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிக.

Join 1,321 other followers

%d bloggers like this: